நண்பன்

நண்பன்

யுகங்கள் பல கடந்தாலும்,
கடலின் அலை போல,
நில்லாமல் உணரப்படும் என் எண்ணங்களின் வாய்கால் நீ!!!

நிறையாத வானம் தன்னை
நட்சத்திரங்களால் அலங்கரித்துக்கொள்ளும்;
நிறைந்த என் உள்ளம் உன்
வார்த்தைகளின் சாரத்தில்!!!

என் பயங்களும், நிறைவேறாத கனவுகளும்
உன் மனம் எனும் சாவி இல்லாப் பெட்டியினுள்!!!

இருவேறு கற்பனை உலகங்கள் நமக்கு,
ஆனால் அவைகளை பின்னிப் பிணைக்கிறது
நம் நட்பு எனும் உறவு!!!

இப்போது கட்டபட்டிருக்கும் அந்த கற்பனை மாளிகையில்
பூசப்பட்டிருகும் நம் நட்பின் வண்ணம்,
புயலிலும் வெயிலிலும் இடியிலும் மழையிலும்
அழியாத கண்ணியம்!!!!


Post a Comment

Popular posts from this blog

Too much love!

Nalangu - a good trailer of how life would be, after marriage!

Happy wedding anniversary!