தங்கை

தங்கை 


அலையும் கரையும் போன்றது 
சொந்தம் எனும் சுவை இது!!!

புரியாத வயதில் கிடைத்த உறவை 
சில நாள் பிரிந்த பின்பு புரிந்தது,
உயிர் தோழி எனும் உண்மை!!!

என் இன்பங்கள் அனைத்தும் 
உன் சிரிப்பின் பிம்பங்கள்;
என் துன்பங்கள் அனைத்தும் 
உன் மனதில் கடிதங்கள்.

சிறு வயதில் 
பசியென்று சொல்லதெரியாமல்,
கண்ணீராய் கரைந்திடுவாய்.
இப்போது 
பயமென்று பிறர் சொல்லிக் கேட்டாலும்,
அதனை சூத்திரமாய் வென்றிடுவாய்.

அனைவரும் வியக்கும் உன் உறுதி;
தமக்கையாய் நான் கொள்ளும் பெருமை.

பொறாமை பொறி தட்டும் 
பிறர் வெற்றி கண்டால்!!!
என் கைகளும் தானாய்த் தட்டும் 
அவை உனக்கு சொந்தமென்றால்!!!Post a Comment

Popular posts from this blog

Nalangu - a good trailer of how life would be, after marriage!

The resistance - crossing the threshold for success!

A mother's dream!